சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள  சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர்  கோயிலில் மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3வது துறை யாக விளங்குகிற சு.ஆடுதுறை கிராமத்தில்தான் ஸ்ரீ குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மகம் நட்சத்திர நாளில், மாசி மகம் திருவிழா சிறப்பாக நடைபெறும். நடப்பா ண்டிற்குக் கடந்த 10ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கிய விழாவின், 9ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வானதேரோட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி காலை பஞ்ச முர்த்திகளுக்கு  18வகையான மூலிகை பொரு ட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொட ர்ந்து பஞ்சமூர்த்திகள் மலர்களால்  அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து , மேள தாளங்கள், முழங்க சுவாமி திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கிராம முக்கி யஸ்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். விழாவில் ஆடுதுறை, ஒகளுர், பெண்ணக்கோனம், அத்தியூர் கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்ப ட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: