நாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்

திருச்சி: திருச்சி நந்திகோயில்தெரு நாகநாதசுவாமி கோயில் மாசிதிருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. இதில்  முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. ஆனந்தவள்ளி உடனுறை நாகநாதசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையத்தில் காசி  விசாலாட்சி அம்மாள் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் 8ம் ஆண்டு மாசிமகம்  தேர்திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி  காசிவிசாலட்சி அம்பாள் உடனுறை காசிவிஸ்வநாதர் சுவாமி தினமும் பல்வேறு  வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய  நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள்  கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக  வலம் வந்தது.

Related Stories: