சிங்கம்புணரி அருகே சதூர்வேத மங்கலத்தில் திருக்கல்யாண விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதூர்வேத மங்கலத்தில் குன்றக்குடி ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட ருத்ரகோடீஸ்வரர் ஆத்மநாயகி அம்மன் கோயில் மாசி மகத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் நேற்று ஐந்தாம் திருவிழாவான திருக்கல்யாண விழா நடைபெற்றது.

இதில் காலை ஆத்மநாயகி அம்மன் மற்றும் ருத்ரகோடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 11 மணிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்மனுக்கு திருகல்யாண விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

× RELATED பால்குட திருவிழா