×

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ஸ்ரீவைகுண்டம்:  நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்கோயில் சுவாமி நம்மாழ்வார் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்கோயிலி் மாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு  சுவாமி நம்மாழ்வாருக்கு காலை 5மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு திருமஞ்சனம், 7.30மணிக்கு நித்தியல் கோஷ்டிம் நடந்தது. 8.00 மணிக்கு கொடிப்பட்டம் ரத வீதிகள் சுற்றிவந்தது. தொடர்ந்து 8.50 மணிக்கு மீனலக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. மாசி திருவிழாவில்  நம்மாழ்வார்சுவாமி தினமும் காலை வீதிபுறப்பாடும், திருமஞ்சனமும், கோஷ்டி வகையறாவும் உத்திராதிமடம் வானுமலை மடம், திருக்குறுங்குடி மடம் கண்ணாடி மண்டபம், பராங்குச மண்டபம் உடையவர் சன்னதி   ஆகியவற்றில் நடக்கிறது.    

தினமும் மாலையில் பல்வேறு வாகனகளில் வீதி புறப்பாடும் நடக்கிறது. பிப்.18ம்தேதி  5ம் திருவிழாவை முன்னிட்டு கருடவாகனத்தில் சுவாமி பொலிந்து நின்றபிரான் கருடசேவை நடக்கிறது.  பிப். 22ம்தேதி 9ம் திருவிழாவை  முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. பிப். 23மற்றும் 24ம்தேதிகளில் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.கொடியேற்றத்தில்  நிர்வாகஅதிகாரி விஸ்வநாத், தக்கார் இசக்கியப்பன், ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்யசபா தலைவர் வரதராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி  உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Devotees ,festival ,martyrs ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...