அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ராகுவும், கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் தங்கி, அந்தந்த ராசிகளுக்கு ஏற்ப பலன்களை தருவதாக கூறப்படுகிறது. நேற்று ராகு பகவான் கடகத்திலிருந்து மிதுனத்திற்கும், கேது பகவான் மகரத்திலிருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.

Advertising
Advertising

இதனையொட்டி அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவகிரகங்களில் உள்ள ராகுவிற்கும், கேதுவிற்கும், பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகுவிற்கும், கேதுவிற்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயில், திருநகரத்தில் உள்ள ராகு, கேது விநாயகர் கோயில், தாதன்குளம் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

Related Stories: