×

திருச்செந்தூர் மாசித் திருவிழா : சுவாமி அம்பாள் வாகனத்தில் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித் திருவிழா 4ம் நாளான நேற்று சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் வீதி உலா வந்தனர். பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இருந்து மாலை 6.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்கின்றனர்.

மாசி திருவிழாவில் இன்று

காலை 4 மணி நடை திறப்பு
4.30 மணி    விஸ்வரூப தரிசனம்
5.00 மணி    அபிசேகம்
5.30 மணி    உதயமார்த்தாண்ட தீபாராதனை
7.00 மணி    சுவாமி, அம்பாள் வீதியுலா
1012 மணி    சொற்பொழிவு
12.00 மணி உச்சிக்கால பூஜை
1.00: மணி திருப்புகழ் இன்னிசை
மாலை 4 மணி சாயரட்சை
மாலை 5 மணி பரதநாட்டியம்
இரவு 7.30 மணி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை வீதிஉலா
7 மணி நாதஸ்வரம் இசை சங்கமம்
9 மணி பக்தி இன்னிசை

Tags : Thiruchendur Masid Festival ,
× RELATED திருச்செந்தூர் மாசித் திருவிழா :...