×

அண்ணாமலையார் கோயிலில் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை: முருகனுக்கு ஆண்டு தோறும், ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிருத்திகையையொட்டி முருகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தை கிருத்திகை அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சன்னதியிலிலிருந்து பக்தர்கள் காவடி ஏந்தி மாடவீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த 16ம் தேதி தை கிருத்திகை அன்று அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் நடைபெற்றதால், அன்றைய தினம் தை கிருத்திகைக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று கிருத்திகையையொட்டி தை கிருத்திகைக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் போனதால், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பக்தர்கள் நேற்று அண்ணாமலையார் கோயிலில் 208 காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருத்திகையையொட்டி அண்ணாமலையார் கோயில் கம்பத்திளையனார் சன்னதியில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது அலங்கார ரூபத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் 208 காவடி ஏந்தி மாடவீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags : devotees ,Annamalaiyar temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...