மது குடிக்கும் படத்தை வெளியிட்ட ஓவியா: நெட்டிசன்கள் அதிர்ச்சி

சென்னை: மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா, கடந்த 2010ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த ‘களவாணி’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, மது அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி குறிப்பிட்டிருக்கிறார். கிளாசில் மது வைத்துக்கொண்டு, சைட் டிஷ்ஷை ருசி பார்ப்பதுபோன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகை ஒருவர் மது குடிப்பதை ஊக்குவிக்கிறார். அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளனர். ஏற்கனவே அமலா பாலும் இதுபோல் மது குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

The post மது குடிக்கும் படத்தை வெளியிட்ட ஓவியா: நெட்டிசன்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: