வில்லிகுடியிருப்பு முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா

உடன்குடி:  உடன்குடி வில்லிகுடியிருப்பு முத்துமாலையம்மன் கோயில் தை மாத கொடை விழா 3 நாட்கள் விமரிசையாக நடந்தது. கடந்த  பிப்.4ம் தேதி கொடை விழா துவங்கியது. கொடை விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு, திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம், கும்பம் உலா, மஞ்சள் நீராடுதல், சிறப்பு அன்னதானம், வில்லிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

× RELATED வில்லிகுடியிருப்பு முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா