துன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு

மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். தைப்பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் உள்ளர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் என்பது ஆகும். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாளும் தைப்பூசமே என்பர்.

தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். நம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் மூன்று வேளையுமே பால், பழம் மட்டுமே உண்பர். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

சித்தர்கள் கூடும் திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற ஆலயங்கள் இந்நன்னாளில் மிகுந்த சக்தி நிரம்பி வெளிப்படும். கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தன்று ஞானசபையில் அதிகாலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாகவே காட்டினார். தைப்பூசம் தினம் அன்றுதான் உலகம் தோன்றியதாக ஐதீகம். உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்கவே முடியாது. குலதெய்வ கோயில் வழிபாடு, முருகன் வழிபாடு, சிவ வழிபாடு செய்ய அருமையான நாள் இதுதான். பக்தர்கள் தவறவிடவே கூடாத நாள்.

Related Stories: