இந்த வாரம் என்ன விசேஷம்? (19 ஜனவரி - 25 ஜனவரி)

ஜனவரி 19, சனி - திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மணலூர் பேட்டை தீர்த்தவாரி, தடுத்தாட்கொண்டபுரம் ஸ்ரீராமானந்தர் ஆராதனை. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் காலையில் தங்கப்பல்லக்கில் பவனி. இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகன சேவை. அறிவாட்ட நாயனார் குருபூஜை. சென்னை கபாலீஸ்வரர் திருவீதியுலா.

Advertising
Advertising

ஜனவரி 20, ஞாயிறு - பெளர்ணமி. செருவாமணி கிராமம் ஆலாத்தூர் சுவாமிகள் ஆராதனை. பைம்பொழில், திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் தேரோட்டம். வடசாவித்திரி விரதம். திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம். மதுரை ஸ்ரீமீனாட்சி தங்கப்பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். தஞ்சாவூர் அருள்மிகு விஜயமண்டபம் தியாகராஜர் திருக்கோயில், அருள்மிகு மேலவாசல் சுப்பிரமணியர் திருக்கோயில்களில் தைப்பூச விழா. தஞ்சாவூர் அருள்மிகு கீழசிங்கப் பெருமாள் திருக்கோயில், ஆண்டு விழா திருக்கல்யாணம்.         

                                                                                 

ஜனவரி 21, திங்கள் - பெளர்ணமி. தைப்பூசம். வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் வெள்ளி ரிஷபம். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஒட்டிவாக்கம் திருவூரல் உற்சவம். காஞ்சி ஸ்ரீவரதர் தெப்பம். திருச்சேறை கோவை, மருதமலை, பழனி தலங்களில் தேரோட்டம். வனசங்கரி பூஜை. மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி தீபம். ஸ்ரீசேந்தனார் நாயனார் குருபூஜை.

ஜனவரி 22, செவ்வாய் - கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி தெப்பத் திருவிழா.  சென்னை ஸ்ரீசிங்காரவேலவர் தெப்போற்சவம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் செளந்திர சபா நடனம். பழநி ஸ்ரீமுருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி.

ஜனவரி 23, புதன் - திருமழிசையாழ்வார். கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி மகா தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர்  தெப்போற்சவம் விழா.

ஜனவரி 24, வியாழன் - சங்கட ஹர சதுர்த்தி. பழநி ஸ்ரீமுருகப் பெருமான் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்பத் தேரிலும் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஜனவரி 25, வெள்ளி - திருவையாறு தியாகப்பிரம்ம ஆராதனை. திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

Related Stories: