இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜனவரி 12, சனி  

Advertising
Advertising

சஷ்டி விரதம். பிள்ளையார் நோன்பு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலமாய்க் காட்சியருளல். திருப்புடைமருதூர் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

ஜனவரி 13, ஞாயிறு  

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப்பல்லக்கில் வீற்றிருக்கும் திருக்கோலம். வாயிலார் நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல். காஞ்சி ஸ்ரீ உலகளந்த பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

ஜனவரி 14, திங்கள்  

உத்தராயண புண்யகாலம். கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.

ஜனவரி 15,  செவ்வாய்  

உத்தராயண புண்யகாலம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நின்ற திருக்கோலம். சபரிமலை மகரஜோதி தரிசனம். பொங்கல் பண்டிகை.

ஜனவரி 16, புதன்  

தை கிருத்திகை. கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் சிறிய வைரத்தேரில் தேரோட்டம். திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில், திருச்சி அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீநம்பெருமாள் கோயில்களில் கனு திருநாள். மாட்டுப் பொங்கல், வேளூர் கிருத்திகை.

ஜனவரி 17, வியாழன்

சர்வ ஏகாதசி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் ராமாவதார திருக்கோலம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம். காணும் பொங்கல், பீஷ்ம ஏகாதசி.

ஜனவரி 18, வெள்ளி
 

பிரதோஷம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் சிவகங்கை தெப்பம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேரோட்டம். கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் திருவீதியுலா. கண்ணப்ப நாயனார் குருபூஜை. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் காலை எடுப்புத்தேர், இரவு சப்தாவரணம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி வரும் காட்சி. திருவையாறு ஸ்ரீஅம்பாளுக்கு சந்தனக் காப்பு, நவசக்தி அர்ச்சனை.

Related Stories: