காய்கறி சாதம்

தேவையான பொருட்கள்:

    

பச்சரிசி - 1 / 2 கப்

துவரம்பருப்பு - 1 / 4 கப்

விருப்பமான காய்கள் நறுக்கியது - 1 / 4 கப்

புளி - பாதி நெல்லிக்காய் அளவு

உப்பு - 1 / 2 தேக்கரண்டி

காரப்பொடி/சாம்பார் பொடி - 1 / 2 தேக்கரண்டி

தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி

கருவேப்பிலை கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2  தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

மிளகாய் வத்தல் - 1

 

செய்முறை:

அரிசி பருப்பை களைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்கவிடவும். களைந்து வைத்த அரிசி பருப்பு சேர்த்து கிளறவும் .  பாதி வெந்ததும் காய்கள் சேர்க்கலாம் முக்கால் வெந்ததும் புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி /சாம்பார் பொடி தனியா பொடி சேர்க்கவும்  கெட்டியான பதம் வந்ததும் நெய் விட்டு மிளகாய் வத்தல் கிள்ளி போட்டு கருவேப்பிலை கொத்தமல்லி இலை தூவினால் அருமையான  காய்கறி சாதம் பிரசாதம்  தயார்.

Related Stories: