×

கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா: ரசிகர்கள் முற்றுகை

 

 

பெங்களூரு: கடை திறப்பு விழாவுக்கு நடிகை தமன்னா படு கவர்ச்சியாக வந்தார். ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார் தமன்னா. பாலிவுட்டில் பிசியானதும் தனது லுக், காஸ்டியூம் ஸ்டைலை தமன்னா மாற்றிக்கொண்டார். இந்தி வெப்சீரிஸ்களில் படு கிளாமராக நடிப்பதுடன் வெளியிடங்களுக்கும் கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றுக்கு நீல நிறத்தில் கவுன் அணிந்து பின்புறம் முழுக்க உடல் தெரியும்படியான ஆடையை அணிந்து அவர் வந்தார்.

பெரிய மால் ஒன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது தமன்னாவை பார்க்க கூட்டம் சேர்ந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்து தமன்னா அங்கிருந்து செல்லும்போது, ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது உடனே பாதுகாவலர்கள் வந்து அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா: ரசிகர்கள் முற்றுகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Tamannaah Padu ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெங்களூரு தனியார் பள்ளி பாட...