×

வெளிப்புறத்தைத் தூய்மையாக்காதீர்கள்

நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் இரண்டு கார்கள் எதிரும், புதிருமாக வருகின்றன. எதிர்பாராத விதமாக அவை மோதிக்கொள்கின்றன. ஒரு காரை ஓட்டி வந்தவர் வக்கீல். இன்னொரு காரை ஓட்டி வந்தவர் டாக்டர். நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இரண்டு கார்களின் முன்பகுதியில் மட்டும் சேதமாகி இருந்தது. லேசான அதிர்ச்சிக்குப்பின் இருவரும் காரிலிருந்து வெளியே வந்தனர். வக்கீல் சொன்னார், பதற்றப்படாதீர்கள்! பயப்படும்படி ஒன்றும் இல்லை; உடனே டாக்டர், எனக்கு இது ஒரு எதிர்பாராத அதிர்ச்சிதான் என்றார். அந்த வக்கீல் உடனே தனது கார்க்கதவைத் திறந்து உள்ளே இருந்த ஒரு மதுபாட்டிலை எடுத்துவந்து ஒரு கண்ணாடிக் கோப்பையில் ஊற்றினார். டாக்டரிடம் கொடுத்தார். ‘‘முதலில் இதைக் குடியுங்கள்’’ அதிர்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்று சொல்லி அன்புடன் உபசரித்தார். மிக்க நன்றி என்று சொல்லி அதை வாங்கி அருந்தினார் டாக்டர். அதன்பிறகு எதிரே நிற்கும் வக்கீலை நிமிர்ந்து நோக்கினார். நீங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்று நான்தான் நினைத்தேன்.

சரிதானே? ஆமாம் உண்மைதான் என்ற வக்கீலிடம், அப்படியானால் நீங்களும் கொஞ்சம் மதுவைச்சாப்பிடலாமே என்று பரிவுடன் கேட்டார் டாக்டர். சாப்பிடத்தான் போகிறேன், ஆனால் இப்போது இல்லை என்றார் வக்கீல். பின் எப்போது? வக்கீல் சொன்னார்; இன்னும் கொஞ்ச நேரத்தில் விபத்தைப்பற்றி விசாரிக்க போலீஸ் வரும். அவர்கள் வந்துபோன பிறகு தான் சாப்பிடுவேன். இப்படித்தான், ‘‘வாழ்க்கையில் நெருக்கடி வருகிறபோது மனிதர்கள் மறைந்து போகிறார்கள்.  வேடங்கள் வெளியே வருகின்றன.’’‘‘எவரும் விளக்கை ஏற்றி நிலவரையிலோ, மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை. மாறாக அறையின் உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும். ஆகையால் உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

உடலின் எப்பகுதியிலும் இருளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய் இருந்தால், விளக்குச்சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல அனைத்தும் ஒளிமயமாய் இருக்கும். இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தன்னோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும்போய் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்தும் முன்பு அவர் கை கழுவாததைக்கண்டு பரிசேயர் வியப்படைந்தனர். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது; பரிசேயரே! நீங்கள் கிண்ணத்தையும், தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும், தீமையும் நிறைந்திருக்கின்றன. வெளிப்புறத்தை உண்டாக்கினவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா? உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும்.’’  (லூக்கா 11: 3341) ‘‘அருள் பெற்றவர் அன்றி வேறு எவரும் இதை உணர்ந்துகொள்ளக்கூடியவர் உணர்ந்து கொள்ளட்டும்.

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags :
× RELATED சுந்தர வேடம்