×

மார்கழி மாத விசேஷங்கள்?

மார்கழி 1, டிசம்பர் 16,  ஞாயிறு   

நவமி. ஆலயங்களில் தனுர்மாத பூஜை ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை இத்தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை. சர்வ ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை உற்சவம் ஆரம்பம்.

மார்கழி 2, டிசம்பர் 17,  திங்கள்  


தசமி. ஸ்ரீகுற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மோகனாவதாரம்.

மார்கழி 3, டிசம்பர் 18, செவ்வாய்  

ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா. ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி.

மார்கழி 4, டிசம்பர் 19, புதன்  

துவாதசி. திருப்பதி நவநிதி மஹா தீர்த்தம். திருவிண்ணாழி பிரதட்சணம். நாச்சியார் கோயில் ஸ்ரீ எம் பெருமான் தெப்பத்தில் உற்சவம்.

மார்கழி 5, டிசம்பர் 20, வியாழன்  

திரயோதசி. பிரதோஷம். கார்த்திகை விரதம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழி உற்சவம். ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய், இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி அருளல்.

மார்கழி 6, டிசம்பர் 21, வெள்ளி  

சதுர்த்தசி. கரிநாள். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் திருக்கோலமாயக் காட்சியருளல். நடராஜர் அபிஷேகம் (பின் இரவு) தத்தாத்ரேய ஜெயந்தி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராப்பத்து உற்சவ சேவை.

மார்கழி 7, டிசம்பர் 22, சனி  

பெளர்ணமி. ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி சிவகாம சுந்திரி ரத தேர் உற்சவம். சிதம்பரம் திருத்தேர், இரவு ஸ்ரீநடராஜரபிஷேகம், குருநாதர் ஜெயந்தி, ஸ்ரீரங்கம் நம்மாழ்வார் மோட்சம். ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்சப் பிராகார உற்சவம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருவாய் மொழி உற்சவம்.

மார்கழி 8, டிசம்பர் 23, ஞாயிறு
 

பிரதமை. ஆருத்ரா தரிசனம். நடராஜர் அபிஷேகம். திருஉத்திரகோசமங்கை கூத்தபிரான் ஆருத்திரா தரிசனம். சீர்காழி ஸ்ரீஉமாமகேஸ்வரர் உச்சிகாலத்தில் புழுக்காப்பு, திருவாரூர் இடப்பாத தரிசனம். சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஸ்ரீ தியாகராஜர் 18 திருநடனம். சிதம்பரம் ஆடல் வல்லபிரான் சித்திர சபையில் சிதம்பர ரகசிய பூஜை.

மார்கழி 9, டிசம்பர் 24, திங்கள்  

துவிதியை. பரசுராம ஜெயந்தி. கரிநாள். ஸ்ரீ ரமண மஹரிஷி ஜெயந்தி. திருமலை ஸ்ரீசடகோபராமானுஜர் பெரிய ஜீயர் ஜெயந்தி. ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ரெங்க மன்னார், மதுரை ஸ்ரீ கூடல் அழகர் ராப்பத்து உற்சவ சேவை.

மார்கழி 10, டிசம்பர் 25, செவ்வாய்  

திரிதியை. கிருஷ்ணபட்ச சங்கடஹர சதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் திருவாய்மொழி திருநாள்.

மார்கழி 11, டிசம்பர் 26, புதன்  


சதுர்த்தி. கரிநாள். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் ராப்பத்து உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.

மார்கழி 12, டிசம்பர் 27, வியாழன்  

தேய்பிறை பஞ்சமி. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவாய்மொழி சாற்றுமுறை. மதுரை ஸ்ரீ கூடல் அழகர் திருவாய்மொழி சாற்று முறை.

மார்கழி 13, டிசம்பர் 28, வெள்ளி  

சஷ்டி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.

மார்கழி 14, டிசம்பர் 29, சனி  

சப்தமி. திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வறு பகவான் சிறப்பு ஆராதனை. கருட தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல ஜீவ கோடிகளுக்கும் படியளந்து அருளிய லீலை.

மார்கழி 15, டிசம்பர் 30, ஞாயிறு  

அஷ்டமி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

மார்கழி 16, டிசம்பர் 31, திங்கள்  

தசமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோட்டம் திரு்ப்புகழ் பஜனை திருமலை திருப்பதி திருஅத்யயன உற்சவ முடிவு.

மார்கழி 17, ஜனவரி 1, செவ்வாய்  

ஏகாதசி. ஸ்மார்த்த ஏகாதசி. திருநெல்வேலி கெட்வேல் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ராஜாங்க சேவை. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

மார்கழி 18, ஜனவரி 2, புதன்  

துவாதசி. ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி, மத்வ ஏகாதசி, காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள் ஆராதனை விழா. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. காஞ்சி  மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதிவுலா.

மார்கழி 19, ஜனவரி 3, வியாழன்  

திரயோதசி. மஹா பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. மதுரை செல்லத்தம்மன் இரவு குதிரை வாகனத்தில் பவனி.

மார்கழி 20, ஜனவரி 4, வெள்ளி  


சதுர்த்தசி. மாத சிவராத்திரி. தொண்டரடிப் பொடியாழ்வார். சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

மார்கழி 21, ஜனவரி 5, சனி  

சர்வ அமாவாசை. ஸ்ரீ அனுமத் ஜெயந்தி. சுசீந்திரம், கெட்வெல், நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரிஷப சேவை. கருட தரிசனம்.

மார்கழி 22, ஜனவரி 6, ஞாயிறு  

மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் காலை சிம்மாசனம், இரவு பட்டாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. சாக்கிய நாயனார் குருபூஜை.

மார்கழி 23, ஜனவரி 7, திங்கள்  

பிரதமை. சந்திர தரிசனம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

மார்கழி 24, ஜனவரி 8, செவ்வாய்  

துவிதியை. திருவோண விரதம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவம் ஆரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி.

மார்கழி 25, ஜனவரி 9, புதன்  

திரிதியை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதியுலா. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் இரவு சந்திரப் பிரபையில் பவனி வரும் காட்சி.

மார்கழி 26, ஜனவரி 10, வியாழன்  

சதுர்த்தி. சதுர்த்தி விரதம். தனுர்வியதீபாதம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு.

மார்கழி 27, ஜனவரி 11, வெள்ளி  

பஞ்சமி.  கர்ப்போட்ட நிவர்த்தி. கூடாரைவல்லி உற்சவ விழா. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்தங்கி சேவை. மதுரை மீனாட்சி சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.

மார்கழி 28, ஜனவரி 12, சனி  

சஷ்டி விரதம். பிள்ளையார் நோன்பு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலமாய்க் காட்சியருளல். திருப்புடைமருதூர் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

மார்கழி 29, ஜனவரி 13, ஞாயிறு  

சப்தமி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். வாயிலார் நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல். காஞ்சி ஸ்ரீ உலகளந்த பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

மார்கழி 30, ஜனவரி 14, திங்கள்  

அஷ்டமி. உத்தராயன புண்யகாலம். கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.


தொகுப்பு: சி. லட்சுமி

Tags :
× RELATED காமதகனமூர்த்தி