அரூரில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா

அரூர்: அரூரில், ஐயப்ப சுவாமி கோயில் ஆண்டு விழாவையொட்டி திருவீதி உலா நடந்தது. அரூரில் ஐயப்பன் கோயிலில் 42ம் ஆண்டு விழா நடைபெற்றது.  இதனையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிலம்பாட்டம், வாண வேடிக்கையுடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. கோயிலில் துவங்கி பைபாஸ் சாலை, கச்சேரி மேடு, திருவிக நகர், பேருந்து நிலையம், கடைவீதி, பாட்சாபேட்டை வழியாக வந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  மேட்டுப்பட்டி ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: