மார்கழி மாத பிறப்பு : திருவெண்பா பாடி பக்தர்கள் ஊர்வலம்

தர்மபுரி: மார்கழி மாதம் பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே ஏராளமானோர் திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஊர்வலமாக சென்றனர். தமிழ் வருடத்தின் 9வது மாதமான மார்கழியில், அதிகாலையில் எழுந்து நீராடி வண்ணக் கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோயில்களுக்கு செல்வோர் திருப்பாவை, திருவெம்பாவை படிப்பது வழக்கம். நேற்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, பெண்கள் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை அணிந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு மங்கலப் பொருட்களை வைத்து வழிபட்டனர்.

கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், ஏராளமானோர் பெருமாள், சிவன் கோவில்களில் வழிபட்டனர். தர்மபுரியில் குமாரசாமிபேட்டையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் திருவெண்பா மற்றும் திருப்பாவையை பாடி ஊர்வலம் சென்றனர். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிவசுப்பிர மணியசாமி கோயிலை அடைந்தனர். மார்கழி மாதம் முடியும் வரை இந்த ஊர்வலம் நடக்கும்.

Related Stories: