கீழ் சவுளுப்பட்டியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம்: கீழ் சவுளுப்பட்டி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். காரிமங்கலம் அடுத்த கீழ் சவுளுப்பட்டியில், புதுப்பிக்கப்பட்டுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி மதியம் கரிக்கோளம், முளைப்பாரி ஊர்வலம், விநாயகர் பூஜை, புற்று மண் எடுத்தல், யாகசாலை அமைத்தல் நடைபெற்றது.  

தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு காப்பு அணிதல், திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பந்தாரஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதன், ஊர் கவுண்டர் ராஜா, மந்திரி கவுண்டர், சின்னசாமி, பூசாரி கவுரன் கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: