×

காரவிளையில் காவடி பவனி திருவிழா

நாகர்கோவில்: காரவிளை ஸ்ரீகார்த்திகேயன் காவடிக்கட்டு கமிட்டி நடத்தும் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கான 6வது ஆண்டு காவடி பவனி திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஜனை, 8 மணிக்கு வேல்பூஜை, 8.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதுபோல் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினமும் காலை 9.15 மணிக்கு காவடியை பூஜையில் அமர்த்துதல், 9.30 மணிக்கு காவடிபூஜை, 10 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு பஜனை, 9 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 7 மணிக்கு காவடி பூஜை, மாலை 7 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 7.45 மணிக்கு அன்னதானம், 8 மணிக்கு காவடி பூஜை, காவடி பாட்டு, இடும்பன் எழுந்தருளல் ஆகியவை நடந்தன.

நள்ளிரவு 12 மணிக்கு காவடிக்கு அபிஷேகம், 1 மணிக்கு வாணவேடிக்கை ஆகியவை நடந்தது. இன்று(14ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு காவடிக்கு அலங்காரம், 4.30 மணிக்கு நையாண்டி மேளம், 5.30 மணிக்கு பால்குடம் நிறைத்தல், காலை 6.15 மணிக்கு முருக பக்தர்களுக்கு வேல்தொடுத்தல், 8.30 மணிக்கு காவடி புறப்படுதல் நடக்கிறது. இதில் மணிகண்டன், வேணு ஆகியோர் புஷ்பகாவடியும், கோபாலகிருஷ்ணன் இடும்பன்காவடியும், கண்ணன், சரவணன், செல்வகுமரன் பறக்கும்காவடியும் எடுக்கின்றனர். பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் விஜயகுமார், நிகேஷ், சிபு, வேணு, மகேஷ், அக்னிஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags : festival ,Kavadi Parvani ,Kavila ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!