செழிப்பாய் வாழ வைப்பாள் மும்பை மகாலட்சுமி

கல்கத்தாவைக் காளி எப்படி தன் சொந்த இடமாக்கிக் கொண்டாளோ அதேபோல் மகாலட்சுமி பம்பாயைத் தன் சொந்த இடமாக்கிக் கொண்டிருக்கிறாள். மகாராஷ்டிரத்தில் கோலாப்பூரிலுள்ள மகாலட்சுமி கோயில் மிகப்பிரசித்தி பெற்றது. இது ஒரு சக்தி பீடம் கோலாப்பூரில் தனிக்கோயில் கொண்டிருந்தாலும் நிறைந்த புகழுடன் மிக்க அருளுடனும் அவள் வாழ்வது மும்பையில்தான். மகாலட்சுமி ஆலயம் ஒரு பங்களா மாதிரி காட்சி அளிக்கிறது. மூன்று முகமுள்ள தேவியைக் காணலாம். நடுவிலுள்ள முகம் காலட்சுமியுடையது. ஒரு பக்கம் காளியின் முகமும், மற்றொரு பக்கம் சரஸ்வதியின் முகமும் காணப்படுகிறது. முகத்தைத் தவிர மற்ற பாகங்களைத் துணியால்  மறைத்திருக்கிறார்கள்.

இந்த இடத்திற்கு அருகில் வொலி காஸ்வே என்றொரு பாலம் கட்டியிருக்கின்றனர். இதைக் கட்டியபோதெல்லாம் இடிந்து போய்க்கொண்டே இருந்ததாம். பல தடவை முயன்றும் கட்டி முடிக்க முடியவில்லை. இச்சமயத்தில் பிரபு என்று பொறியாளர் ஒருவரது கனவில் மகாலட்சுமி தோன்றி தானும் தன் துணைவியார்களும் கடலில் அமிழ்ந்து கிடப்பதாகவும், தங்களை வெளிக்கொணர்ந்து கோயில் அமைத்தால் பாலம் கட்ட முடியும் என்று தெரிவித்தாளாம். அந்த பிரபுதான் இந்த அம்மனைக் கண்டெடுத்து ஆலயத்தை நிர்மாணித்து அப்பாலத்தையும் கட்டியிருக்கிறார். இக்கோயில் கி.பி.1761-ல் கட்டப்பட்டது.

Related Stories: