×

கீழ்சவுளுப்பட்டி ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கீழ் சவுளுப்பட்டியில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை(13ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று(12ம் தேதி) மதியம் 12 மணிக்கு கரிக்கோளம், முளைப்பாரி ஊர்வலமும், மாலை 3 மணிக்கு விநாயகர் பூஜை, திருவிளக்கு பூஜை, புற்று மண் எடுத்தல், யாக சாலை நிறுவுதல், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது.

இதை தொடர்ந்து நாளை(13ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு காப்பு அணிதல், 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 6 மணிக்கு 2ம் கால யாக பூஜை, 7.30 மணிக்கு யாக சாலை பூஜை நிறைவும், காலை 8.15 மணிக்கு திருக்குடம் புறப்படுத்தலும், 8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. 9.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பந்தாரஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதன், ஊர் கவுண்டர் ராஜா, மந்திரி கவுண்டர், சின்னசாமி, பூசாரி கவுரன் கவுண்டர் மற்றும் விழா குழுவினர், கீழ் சவுளுப்பட்டி கிராம மக்கள் செய்துள்ளனர்.

Tags : Kumbazhuppatti Sri Muruganamman Temple Kumbabisheka Festival ,
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?