நாங்குநேரி கோயிலில் பகல் பத்து திருவிழா

நாங்குநேரி: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில், கடந்த 9ம் தேதி பகல்பத்து திருவிழா தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்து வருகிறது. இரவில் மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் திருக்கோஷ்டியினரின் சிறப்பு திவ்ய பிரபந்த பாடல்கள் பாடி பெருமாள் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து பெருமாள் புறப்பாடு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதில் பெருமாளுக்கு பல்வேறு அவதார அலங்காரம் செய்யப்படுகிறது. வருகிற 18ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: