பொட்டல்புதூரில் முகைதீன் ஆண்டவர் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கடையம்: பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து டிச. 21 வரை 14 நாள்கள் நடைபெறுகிறது. பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அன்று பகல் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கீழுர் ஜமாஅத்திலிருந்து நிறைபிறை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், தென்காசி, பேட்டை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 17ம்தேதி இரவு 8மணிக்கு பச்சைக்களை ஊர்வலமும், 18ம்தேதி 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்திலிருந்து 10ம் இரவு கொடிஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்திலிருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 19ம்தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீபஅலங்காரம் நடக்கிறது. வருகிற 21ம்தேதி மாலை 14ம் நாள் இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டித்தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: