இந்த வாரம் என்ன விசேஷம்?

டிசம்பர் 8, சனி  

பிரதமை. சந்திர தரிசனம். விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். மூர்க்கனார் குருபூஜை.

டிசம்பர் 9, ஞாயிறு  

துவிதியை. கௌரி விரதம். திருச்சானூர் தாயார் கருட சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை. சிறப்புலியார் குருபூஜை

டிசம்பர் 10, திங்கள்  

திரிதியை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலம். சைதை காரணீஸ்வரர் சங்காபிஷேகம், திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் 1008 சங்காபிஷேகம். நான்காவது சோமவாரம்.

டிசம்பர் 11, செவ்வாய்  


சதுர்த்தி. திருவோண விரதம். கௌரி விரதம். அத்திப்பட்டு அழகிய சிங்கர் சாற்றுமறை.

டிசம்பர் 12, புதன்  


பஞ்சமி. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் திருமொழி திருநாள் தொடக்கம்.

டிசம்பர் 13, வியாழன்  

சஷ்டி. சுப்ரமணிய சஷ்டி. ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம்.

டிசம்பர் 14, வெள்ளி  

சப்தமி. நந்த சப்தமி. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

× RELATED திருமண வரமருளும் திருவில்லிப்புத்தூராள்