கோட்டை காளியம்மன் கோயிலில் மகரஜோதி பூஜை கொண்டாட்டம்

சேலம்: சேலம் கோட்டை அண்ணா நகர் காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை, மகரஜோதி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து 41 நாட்கள் தினசரி காலை 6 மணிக்கு நடைதிறப்பு, 12 மணி முதல் 1 மணி வரை கணபதி ஹோமம், ெநய்அபிஷேகம், அஷ்டாபிஷேகம், இரவு உஷ பூஜை, தீபாராதனை, பகவதி சேவை, தாலாட்டு நடந்து வருகிறது. 27ம் தேதி பகல் 12 மணிக்கு மண்டல பூஜையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

28ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை நடக்கும் மகர விளக்கு பூஜையில், தினசரி காலை 6 மணிக்கு நடை திறப்பு, பகல் 12 மணிக்கு நடைசாத்துதல், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, இரவு 9 மணிக்கு நடைசாத்துதல் நடக்கிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும் புத்தாண்டு பூஜை நடக்கிறது. உற்சவ பூஜை 7 நாட்கள் நடக்கிறது. ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையன்று, காலை 10 மணிக்கு உச்ச பூஜை, பொங்கல், பால் பாயாசம் வழங்குதலும், இரவு 9 மணிக்கு பகவதி சேவையும் நடக்கிறது. பக்தர்கள் பொருள் உதவியோ, பண உதவியோ வழங்கலாம். மேலும் விபரங்களுக்கு கோயில் அர்ச்சகர் விஷ்ணு சிவத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்