உடுப்பி முறுக்கு

என்னென்ன தேவை?

இட்லி அரிசி - 2 கப்,
உளுத்தம் பருப்பு - 1 கப் (சிவப்பாக வறுத்து நைசாக பொடித்தது),
எள் (கருப்பு, வெள்ளை எள் தலா) - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
வெண்ணெய் - 50 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,  
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின் நைசாக அரைத்துக் கொள்ளவும் (மிக்ஸி அல்லது உரலில்). உளுத்தம் பருப்பை சிவக்க வாசம் வரும்வரை வறுத்து நைசாக பொடி செய்யவும். தேங்காயை துருவி அரைத்துக் கொள்ளவும். அல்லது அரிசியுடன் சேர்த்தே அரைக்கவும். அரைத்த அரிசி மாவு, உளுத்தம் மாவு, உப்பு, பெருங்காயம், எள், சீரகம், வெண்ணெய், தேங்காய் விழுது சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு, உடனே  எண்ணெயை காய வைத்து பிழியவும். பெரிய முறுக்காகவோ, சிறிய முறுக்காகவோ விருப்பமானபடி பிழியவும். பொரித்த முறுக்கு ஆறியதும் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

குறிப்பு:

கட்டி பெருங்காயத்தை கரைத்து சேர்த்தால் மணம் நன்றாக இருக்கும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

× RELATED உடுப்பி ஓட்டல் கலாசாரத்தை மாற்றியவர் என் தாத்தா!