×

கார்த்திகை மாத விசேஷங்கள்?

கார்த்திகை 1, நவம்பர் 17,சனி   

வளர்பிறை நவமி. கரிநாள். முடவன் முழுக்கு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ சண்முகர் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

கார்த்திகை 2, நவம்பர் 18, ஞாயிறு  

தசமி. மணச்சநல்லூர் ஸ்ரீருக்மணி கல்யாண வைபவம். திருச்சி ஸ்ரீ ராமபஜனை மடம். சுவாமி மலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.

கார்த்திகை 3, நவம்பர் 19, திங்கள்  

வளர்பிறை ஏகாதசி. கார்த்திகை முதல் சோமவாரம். கரிநாள். திருக்கடவூர். திருப்பனந்தாள் வேளூர் திருவையாறு 1008 சங்காபிஷேகம். ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி. வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

கார்த்திகை 4, நவம்பர் 20, செவ்வாய்  

துவாதசி. மஹா பிரதோஷம். ஷுராப்தி பூஜை. யாக்வல்கிய ஜயந்தி. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலநாயகர் மஹா ரதோற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ சண்முகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

கார்த்திகை 5, நவம்பர் 21, புதன்  

திரயோதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

கார்த்திகை 6, நவம்பர் 22, வியாழன்  

பௌர்ணமி. திருவண்ணாமலை கிரிவலம். துளசி விரதம். பரணி தீபம். கார்த்தீக கௌரி விரதம். திருமங்கையாழ்வார், கணம்புல்லர்.

கார்த்திகை 7, நவம்பர் 23, வெள்ளி  

திருக்கார்த்திகை. பாஞ்சராத்திர ஜெயந்தி. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் மஹா ஜோதி.

கார்த்திகை 8, நவம்பர் 24, சனி  


பிரதமை. வாஸ்துநாள். மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபாலஸ்வாமி புறப்பாடு.

கார்த்திகை 9, நவம்பர் 25, ஞாயிறு


துவிதியை. திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல நாயகர் கைலாச கிரி பிரதட்சணம்.

கார்த்திகை 10, நவம்பர் 26, திங்கள்  

திரிதியை. சங்கடஹரசதுர்த்தி. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் சங்காபிஷேகம். இட்சதீபம். கார்த்திகை இரண்டாவது சோமவாரம். கரிநாள்.

கார்த்திகை 11, நவம்பர் 27, செவ்வாய்  

தேய்பிறை பஞ்சமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடி அருளல்.

கார்த்திகை 12, நவம்பர் 28, புதன்  

சஷ்டி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் 1008 சங்காபிஷேகம்.

கார்த்திகை 13, நவம்பர் 29, வியாழன்  


சப்தமி. சாவித்ரி கல்பாதி. திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு தங்க கவசம்.

கார்த்திகை 14, நவம்பர் 30, வெள்ளி  


தேய்பிறை அஷ்டமி. கால பைரவாஷ்டமி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

கார்த்திகை 15, டிசம்பர் 1, சனி  

தேய்பிறை நவமி. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மெய்ப்பொருள்நாயனார்.

கார்த்திகை 16, டிசம்பர் 2, ஞாயிறு  

தேய்பிறை தசமி. திருநாகேஸ்வரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதித்தாயார் உற்சவம் ஆரம்பம். ஆன் ஆயர்.

கார்த்திகை 17, டிசம்பர் 3, திங்கள்  

சர்வ ஏகாதசி. கரிநாள். ஸ்ரீ ரங்கம். ஸ்ரீ நம்பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சிவ சைலநாதர் நந்திக்கு முழுகாப்பு. சிவாலயங்களில் சங்காபிஷேகம். மூன்றாவது சோமவாரம்.

கார்த்திகை 18, டிசம்பர் 4, செவ்வாய்  

துவாதசி. பிரதோஷம். திருச்சானூர் பத்மாவதித் தாயார் பிரம்மோற்சவம் ஆரம்பம்.

கார்த்திகை 19, டிசம்பர் 5, புதன்  

திரயோதசி. மாத சிவராத்திரி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

கார்த்திகை 20, டிசம்பர் 6, வியாழன்  

சர்வ அமாவாசை. திருவிசைநல்லூர் கங்காகர்ஷணம். கும்பகோணம் ஸ்ரீ ஆராவமுதன் ஊஞ்சல் உற்சவாரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் சாத்தல். வைரவேல் தரிசனம்.

கார்த்திகை 21, டிசம்பர் 7, வெள்ளி  

ஸ்ரீகூடல் அழகர் கருட உற்சவம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். திருத்தணி ஸ்ரீ செந்தில்வேலவன் கிளி வாகன சேவை.

கார்த்திகை 22, டிசம்பர் 8, சனி  

பிரதமை. சந்திர தரிசனம். விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். மூர்க்கனார்.

கார்த்திகை 23, டிசம்பர் 9, ஞாயிறு  

துவிதியை. கௌரி விரதம். திருச்சானூர் தாயார் கருட சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை. சிறப்புலியார்.

கார்த்திகை 24, டிசம்பர் 10, திங்கள்  

திரிதியை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலம். சைதை காரணீஸ்வரர் சங்காபிஷேகம், திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் 1008 சங்காபிஷேகம். நான்காவது சோமவாரம்.

கார்த்திகை 25, டிசம்பர் 11, செவ்வாய்  

சதுர்த்தி. திருவோண விரதம். கதளீ. கௌரி விரதம். அத்திப்பட்டு அழகிய சிங்கர் சாற்றுமறை.

கார்த்திகை 26, டிசம்பர் 12, புதன்  

பஞ்சமி. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள். திருவள்ளூர் ஸ்ரீ வீர ராகவப்பெருமாள் திருமொழி திருநாள் தொடக்கம்.

கார்த்திகை 27, டிசம்பர் 13, வியாழன்  

சஷ்டி. சம்பக சஷ்டி. சுப்ரமணிய சஷ்டி. ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம்.

கார்த்திகை 28, டிசம்பர் 14, வெள்ளி  

சப்தமி. நந்த சப்தமி. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருமொழித் திருநாள் தொடக்கம்.

கார்த்திகை 29, டிசம்பர் 15, சனி  

அஷ்டமி. கும்பகோணம் ஸ்ரீ ஆராவமுதன் ஊஞ்சல் உற்சவம் பூர்த்தி.

தொகுப்பு: எஸ்.இசக்கி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?