திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா நிறைவு : சுவாமி, தெய்வானை அம்பாள் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு வைபவத்தைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனி சப்பரத்தில் வீதியுலா இரவு நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் கடந்த 13ம் தேதி நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவத்துக்கு பிறகு 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவ சேவை நடந்தது. இந்நிலையில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. இதைத் தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகள் உலா வந்து திருக்கோயிலை வந்தடைந்தனர்.

Related Stories: