சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை சோமவாரம் தொடக்கம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று கார்த்திகை சோமவாரம் தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து நடராஜர் கோயிலில் சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் சோமவாரம் விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான  நேற்று அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பெண்கள் நடராஜர் சன்னதியையும், கொடி மரத்தையும் வலம் வந்தனர். சிலர் சபையை சுற்றி அங்க பிரதட்சணம் செய்தனர். இதே போன்று கோயிலில் உள்ள ஆதிமூலநாதர் சன்னதியையும் பெண்கள் 108 முறை வலம் வந்தனர். கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோயிலில் குவிந்தனர்.

Related Stories: