பாவங்களை போக்கும் பிரம்ம வித்யாம்பிகை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்பாலிக்கிறாள் பிரம்ம வித்யாம்பிகை. தல விருட்சங்களாக வடவால், கொன்றை, வில்வ மரங்களும், சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களும் கொண்ட தலம். புராணப் பெயர் ஆதிசிதம்பரம். தேவியின் சக்தி பீடங்களில் இத்தலம் பிரணவசக்தி பீடமாக போற்றப்படுகிறது. மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யேஸ்வரரை நோக்கி தவம் இருந்து அவரைத் தன் கணவனாக பெற்றார்.

பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகையானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபடுவது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு), வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபயமளிக்கிறது. இடது கீழ்க்கரம் திருவடிகளின் பெருமையை சுட்டுகிறது. இத்தல தரிசனம் பூர்வ ஜென்ம பாவங்களை நீக்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களும் குணமாகும், கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிட்டும். பேய், பிசாசு தொல்லைகள் நீங்கும்.

Related Stories: