×

திருவருள் பாலிக்கும் திருவருணை நாயகி

அம்பிகை அபீத குஜாம்பாள் எனும் உண்ணாமுலையம்மனாக திருவருட்பாலிக்கும் தலம் திருவண்ணாமலை. தலமரமாக மகிழமரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தங்களும் உள்ளன. இங்கு ஆடிப்பூரம் அன்று தீமிதி திருவிழா அம்மன் சந்நதி முன்பாக நடக்கும். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று தான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலையை கிரிவலம் வருதல் சிறப்பு.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. சுவாமிக்கு வேஷ்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்து தல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திக்கடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.

Tags : Thiruvoor Palai ,
× RELATED சுந்தர வேடம்