×

கல்வியறிவைப் பெருக்கும் கமலாம்பாள்

கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள் என முப்பெருந்தேவியர்கள் திருவருள் புரியும் திருத்தலம் திருவாரூர். தல விருட்சமாக பாதிரி மரத்தையும், தல தீர்த்தமாக கமலாலயக் குளத்தையும் கொண்ட தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும். திருவாரூரில்  மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள்.

வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணிபோல் காட்சி தருகிறாள். மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியன நிறைவேறுகின்றன. அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர்தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் ‘திருவாரூர் தேரழகு’ என்பார்கள். இங்குள்ள உற்சவ அம்மனான ‘மனோன்மணி’க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

Tags : KAMALAMALAM ,
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா