தில்லி காட்டியா மிக்சர்

என்னென்ன தேவை?

கடலை மாவு - 1½ கப்,

கையில் கசக்கிய ஓமம், கரகரப்பாக பொடித்த மிளகு - தலா 1/4 டீஸ்பூன்,

சமையல் சோடா - 1 சிட்டிகை,

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

கறிவேப்பிலை - சிறிது,

வேர்கடலை - 1/4 கப்.

எப்படிச் செய்வது?

கடலை மாவை நன்றாக சலித்து அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் கலந்து, பொரிக்க எண்ணெயை தவிர மற்ற பொருட்கள்  அனைத்தையும் கலந்து தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து 5 நிமிடம் வைக்கவும். மீண்டும்  பிசைந்து பெரிய கண் உள்ள அச்சில் போட்டு எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து மாவை பிழிந்து நன்றாக வேகவிட்டு எடுத்து  எண்ணெயை வடித்து பரிமாறவும்.

குறிப்பு:

வேர்கடலை, கறிவேப்பிலை, ஜவ்வரிசியை பொரித்தும் சேர்க்கலாம்.

Related Stories: