திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி தட்சிணாமூர்த்தி யாகம்

திருமலை: திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி தட்சிணாமூர்த்தி யாகம் நடந்தது. திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையோட்டி ஒரு மாதத்திற்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விநாயகர் யாகம், சுப்பிரமணிய சுவாமி யாகம், நவக்கிரக யாகம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையான நேற்று தட்சிணாமூர்த்தி யாகம் நடத்தப்பட்டது.

இதில் மகா பூர்ணாஹுதி,  கலச உத்வாசனம், மகா சாந்தி அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில்  கண்காணிப்பாளர் ராஜ்குமார், அர்ச்சகர்கள் சுவாமிநாத சுவாமி, மணி சுவாமி, கோயில் ஆய்வாளர் முரளி கிருஷ்ணா, ரெட்டி சேகர் உட்பட அதிகாரிகளும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று முதல் 24ம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு காமாட்சி தாயாருக்கு யாகம் ( சண்டியாகம் ) நடத்தப்பட உள்ளது. இந்த யாகத்தில் 500 கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்கலாம் என்று துணை செயல் அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: