பாதாள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் தரிசனம்

நாகை: நாகை சட்டயப்பர் கோயில் தெற்கு வீதி புளியமாத்துகோடியில் உள்ள பாதாளகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் கடந்த 12ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் கால யாக பூஜையும், நேற்று காலை கோ பூஜை நடைபெற்று 2ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 10 மணிக்கு கடம் புறப்பாடும் 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Related Stories: