திருப்புல்லாணியில் ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் உள்ள ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா அனுக்கை விக்னேஸ்வர பூஜை, காப்புக்கட்டுதல் ஆகியவற்றுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகளை பாபுசாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது.

நேற்று அதிகாலையில் கோ பூஜை, யாத்ரா தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்ற பின்பு புனித நீர்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு ராஜகோபுரத்தில்  புனிதநீரை ஊற்றினார்கள். மூலவர் புல்லாணி மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தது. மூலவர் புல்லாலாணி மாரியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்புல்லாணி ஜெகன்நகர் பகுதி பொதுமக்கள், கிராமத்தினர் இணைந்து செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புல்லாணி போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: