செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா

பாடாலூர்:  ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த சனிக்கிழமை் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமைருத்ர ஜப ஹோமம் நடைபெற்றது. நேற்று செவ்வாய்கிழமை ஷண்முகா ஹோமம், மஹா அபிஷேகம்  நடைபெற்றது. இதில் சந்தனம், குங்குமம், விபூதி, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து மஹா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் செட்டிகுளம், பொம்மனப்பாடி , சத்திரமனை, குரூர், மங்கூன், சிறு வயலூர் , நக்கசேலம் ,மாவிலங்கை , நாட்டார் மங்கலம், கூத்தனூர் , பாடாலூர், இரூர், ஆலத்தூர் கேட், நாரணமங்கலம், மருதடி, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா கமிட்டியினர் மற்றும் கோயில் செயல் அலுவலர் யுவராஜ் , தக்கார் பாரதிராஜா  செய்திருந்தனர்.

Related Stories: