மருதமலையில் சூரசம்ஹாரம் விழா : பக்தர்கள் குவிந்தனர்

கோவை: மருதமலையில் சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை அருகே உள்ள ஏழாம் படை என கருதப்படும்  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. தொடர்ந்து விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு யாகசாலை பூஜை நடந்தது.  விழாவின் ஆறாம் நாளான நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் பச்சை நாயகி அம்மன் சன்னதியில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் தனது ஆட்டு கிடாய் வாகனத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

Advertising
Advertising

பிறகு முருப்பெருமான் வெற்றி வாகை சூடியதை அடுத்து சேவல் கொடி ஏற்றப்பட்டது. அப்போது பக்த்ர்கள் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.  இதையடுத்து இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலையில் முருகன் குழந்தை வேலாயுத சுவாமியாக மேற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த 8ம் தேதி கந்தசஷ்டி விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் முருகனுக்கு காலையில் அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சூரசம் ஹாரவிழா நடந்தது. உற்சவர் குழந்தை வேலாயு சுவாமி மலையில் இருந்து கிழே இறங்தி தேர் நிலை திடல் வந்து சேர்ந்தார். பின்னர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கட்டளை தாரர் சுகன்யா ராஜரத்தினம், கோவை அறநிலையத்துறை உதவி ஆய்வாளர் விமலா, செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், ஆய்வாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: