தவறான குற்றச்சாட்டு மிகவும் தீமையானது!

தியாகம் என்பது ஒருவர் சுயநலத்தை விட்டுவிட்டு தனது குணத்தை பிறர் நலனுக்காக சீரமைத்துக் கொள்வதாகும். அதாவது உயரிய ஞானத்தின் மூலம் அகந்தையை அழிப்பதாகும். ஆன்மிகப் பாதையின் முதற்படி தியாகம். நேர்மையற்றவர்களை நேர்மையுடையோர்களாக ஆக்குவோம். நமது மனஉறுதியை சோதித்துப் பார்த்துக் கொள்வோம். அக ஒழுக்கம் பெற்றிருக்க முயற்சி செய்வோம். மனதைப் பக்குவப்படுத்திக் கொள்வோம். அத்துமீறிய விரும்பத்தகாத செயல்கள் அனைத்தையும் துண்டித்து விடுவோம். விருப்பு, வெறுப்பு இன்றி இருப்போம். ‘நான்’ என்ற எண்ணத்தை, அகங்காரத்தை அகற்றிவிடுவோம். நமது வாழ்க்கை சோதனைகளும் துன்பங்களும் நிறைந்ததாக அமைந்திருக்கிறது. காலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு அதன்மூலம் காலக்கணக்கைக் கடந்து நிற்கும் கடவுளை அடையலாம்.

இறைவனைத் தேடுவோம், இறைவனை அடைய வேட்கை கொள்வோம். இவ்வாறெனில் இறைவனை நாம் தரிசிப்பது உறுதி. ‘‘சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கி விடுகின்றது. அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகின்றது. குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கின்றது. மனிதரை உரையாடல்

பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது. சொல் மனிதரின்  உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே! பேச்சைக் கொண்டே  அவரை அறிந்து கொள்ளலாம். நீதிநெறியைப் பின்பற்றி நடந்தால் அதனை அடைந்து கொள்வாய். மாட்சிமிகு நீண்ட ஆடையாக அதனை அணிந்துகொள்வாய். பறவைகள் நம்முடைய இனத்தோடு தங்குகின்றன. உண்மை அதனைக் கடைப்பிடிபோரிடம் குடிகொள்ளும்.

இரைக்காகப் பதுங்கிச் சிங்கம் காத்திருக்கின்றது. தீமை செய்கிறவர்களுக்காகப் பாவம் காத்திருக்கிறது.

இறைப் பற்றுள்ளோரின் பேச்சு எப்போதும் ஞானமுள்ளது. அறிவிலியின் நிலவுபோல மாறுபடுவர். அறிவிலியிகள் நடுவில் காலத்தை வீணாக்காதே. அறிவாளிகள் கருவில் நிலைத்து நில். மூடரின் உரை வெறுக்கத்தக்கது. அவர்களின் சிரிப்பு பாவத்தை தூண்ட வல்லது. அடிக்கடி ஆணையிடுவோரின் பேச்சு மெய்சிலிர்க்கச் செய்கிறது. அவர்களின் வாய்ச்சண்டை நம் காதுகளை மூடச் செய்கின்றது. செருக்குற்றோரின் வாய்ச்சண்டை கொலைக்கு இட்டுச் செல்லும்; அவர்களின் வசை மொழி கேட்பது வருத்தத்திற்கு உரியது.’’ (சீராக் 17:415) நாம் பிறரைப்பற்றி பேசுவதற்கு முன் நம் வார்த்தை அவரை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்று சிந்தனை செய்யவேண்டும். நம் வார்த்தைகள் மற்றவர்களுக்குத் தீமை இழைத்தால் அல்லது அவர்களது புகழைக் கெடுத்தால் நம் நாவை அடக்க வேண்டும்.

தவறான குற்றச்சாட்டு மிகவும் தீமையானது. கொடிய வார்த்தைகள் மற்றவர்களுக்கு மனஉளைச்சலையும், வருத்தத்தையும், குடும்ப உறவின் முறிவுகளுக்கும் காரணமாகின்றன. இவ்வுலகில் வாளால் குத்துண்டு இறந்தவர்களைவிட வார்த்தைகளால் குத்தப்பட்டு இறந்தவர்கள் அதிகம். ஒருவரைப் பற்றித் தவறாக புறம் பேசுதல், அவதூறு பரப்புதல், அவமதித்தல் ஆகியவை அவர்களைக் காயப்படுத்தும்.‘‘உன் கண் கெட்டிருந்தால் உன் உடல் முழுவதும் இருண்டிருக்கும். உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்; பாம்புகளைப்போல் விவேகமுள்ளவராகவும், புறாக்களைப்போல் கபடமற்றவராகவும் இருங்கள்; வாய்க்குள் நுழைவது மனிதனை மாசுபடுத்துவதில்லை. வாயிலிருந்து வெளிவருவதே மனிதனை மாசுபடுத்தும்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: