வயலூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகல துவக்கம்

திருச்சி: திருச்சி அடுத்த வயலூரில் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று (8ம் தேதி) காலை 7மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், சண்முகார்ச்சனையுடன் துவங்கியது. மாலை 6மணிக்கு ரக்‌ஷா பந்தனம், அபிஷேக ஆரா தனை, இரவு சிங்காரவேலர் பச்சைமயில், வாகனத்தில் திருவீதி

உலாவும் நடைபெற்றன. இன்று (9ம்தேதி) முதல் வரும் 12ம் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்கார வேலர் கேடயத்தில் வீதி உலா வருகிறார். சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனை, மதியம் சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு முறையே சிங்காரவேலர் சேஷ, அன்னம், வெள்ளி மயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

11ம் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கும், 12ம் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கும் பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனை, 10.45 மணிக்கு சூரபத்மனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.30க்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். முத்துக்குமார சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருள்கிறார். வரும் 14ம் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்மு கார்ச்சனை நடை பெறும். இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக் கிறது. தினமும் இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: