ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கேதார கவுரி விரதம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடந்த கேதார கவுரி விரதத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென் கைலாயமாக திகழும் ஆன்மிக தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையன்று தேவஸ்தானம் சார்பில் கேதார கவுரி விரத பூஜைகள்  கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மண்டபத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கவுரிதேவி அம்மனுக்கு பல்வேறு வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடந்தது. பின்னர், பல்வேறு மலர் மற்றும் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி கலச ஸ்தாபனம் செய்தனர்.

இதில் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கேதார கவிரி விரத பூஜையில் கலந்து கொண்டு  பக்தியோடு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் குங்கும அர்ச்சனைகள் செய்து வேதப்பண்டிதர்களால் மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். பின்னர் நோன்புக் கயிறை ஒருவருக்கு ஒருவர் கையில் கட்டிக் கொண்டு பின்னர் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஞானாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தனர். பின்னர் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பூஜை பொருடகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

× RELATED இண்டர்நெட் விரதம்