தெற்கு பேய்க்குளம் முத்தாரம்மன் கோயில் ஐப்பசி கொடை விழா

சாத்தான்குளம்: தெற்கு பேய்க்குளம் முத்தாரம்மன் கோயிலில் ஐப்பசி கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல்  நாள் மாலை கணபதிஹோமம், கும்பம் ஏற்றுதல்,தீபாராதனை, இரவு 7மணிக்கு 208 திருவிளக்கு பூஜை, மாக்காப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து  திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 2ஆம் நாள் காலை 9மணிக்கு பால்குடம் மற்றும் அம்மனுக்கு நேர்த்தி கடன் கொண்டு செல்லல், காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு  அம்மனுக்கு அலங்கார பூஜை, மதியம் 1மணிக்கு அன்னதானம், மாலை 3மணிக்கு பொங்கலிடுதல், இரவு 7மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வருதல், 8மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு அம்மனுக்கு படப்பு  சாமக்கொடை விழா  நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

× RELATED கடன் தீர்க்கும் கள்ளழகர் தரிசனம்