அக்டோபர் 20, சனி
ஸர்வ ஏகாதசி. தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜ ராஜசோழன் 1033வது பிறந்தநாள்.
அக்டோபர் 21, ஞாயிறு
திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சனேயருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளல்.
அக்டோபர் 22, திங்கள்
பிரதோஷம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
அக்டோபர் 23, செவ்வாய்
திருவண்ணாமலை கிரிவலம் 23102018 இரவு 10.48 றிவி முதல் 24102018 இரவு 10.51 றிவி. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.
அக்டோபர் 24, புதன்
பவுர்ணமி. அன்னாபிஷேகம். திருமூலர். கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் அன்னக்கூட உற்சவம், வடலூர் சித்தி வளாக கொடியேற்றம். சந்தானகோபால விரதம், கோமதி பூஜை. திருநெல்வேலி காந்திமதியம்மன் உற்சவாரம்பம்.
அக்டோபர் 25, வியாழன்
ஆஸ்வின பஹுள பிரதமை. நெடுமாறனார். தில்லை சிவகாமியம்மன் கொடியேற்றம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. தென்காசி உலகம்மை திருவீதியுலா.
அக்டோபர் 26, வெள்ளி
துவிதியை. கிருத்திகை. இடங்கழியார். தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதியுலா. திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம்.