×

இந்த வாரம் என்ன விசேஷம்?

அக்டோபர் 13, சனி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

அக்டோபர் 14, ஞாயிறு


திருமலை நவராத்திரி கருட சேவை, ஆதிவண் சடகோப யதீந்திர மஹாதேசிகன்.

அக்டோபர் 15, திங்கள்

திருவஹிந்திரபுரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவீதி புறப்பாடு. சரஸ்வதி ஆவாஹனம். தாமிரபரணி மகாபுஷ்கரம் பூர்த்தி. திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

அக்டோபர் 16, செவ்வாய்

துர்க்காஷ்டமி. ஸ்ரீரங்கம் தாயார் திருவடி சேவை. திருக்குற்றாலம் சிவபெருமான் பவனி. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.

அக்டோபர் 17, புதன்

திருமலை ரதம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி மூலஸ்தான மகாஅபிஷேகம். ஏனாதி நாயனார் குருபூஜை. சகல ஆலயங்களிலும் மகாநவமி பூர்த்தி. பாபநாசம் சிவபெருமான் பவனி.. மதுரை மீனாட்சி கொலு தர்பார் காட்சி. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.

அக்டோபர் 18, வியாழன்

சரஸ்வதி பூஜை.திருவோண விரதம். மகா நவமி. திருவம்பல், பாபநாசம், குற்றாலம் தலங்களில் சிவபெருமான் பவனி. விஷு புண்ணிய காலம். தேவகோட்டை மணி முத்தாறு நதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி விஷு உற்சவ தீர்த்தவாரி சேவை. துலா காவேரி ஸ்நானாரம்பம்.

அக்டோபர் 19, வெள்ளி

விஜய தசமி. ஷீரடி சாய்பாபா சமாதி தினம். சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் பார்வேட்டை கரும்பூர் எழுந்தருளல். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வசந்த உற்சவ பங்களாவுக்குச் சென்று வன்னி மரத்தடியில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி