பலன் தரும் ஸ்லோகம் : (நினைவாற்றலை அருளும் சரஸ்வதி ஸ்லோகம்... )

பாணித்வயே நாக்ஷமாலமபி ஸ்படிகாம்

ஞானஸாராத்மகம் புஸ்தகம் சாங்குசம்

பாச்மாவிப்ரதீ யேந ஸந்சிந்த்யஸே தஸ்ய

வக்த்ராந்தராத்கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்

- காளிதாசரின் ஸ்யாமளா தண்டகம்

பொதுப் பொருள்:

சரஸ்வதி தேவியே, உன் கரங்கள் தாமரை மலர்கள் போன்றவை அந்த அழகிய கரங்களில் ஞானத்தின் சாரமாகிய புத்தகமும், ஸ்படிகமணியால் ஆன ஜபமாலையும், எழுதுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை வணங்குகிறேன். உன்னை தியானிப்போரின் நாவின் மூலம் உரைநடை மற்றும் செய்யும் வடிவான வாக்கு சாதுர்யம் உன்னருளால் தானாகவே வெளிப்படுவதை நான் உணர்கிறேன். அன்னையே உனக்கு நமஸ்காரம்.

(மாணவ, மாணவியர் பாடங்களைப் படிப்பதற்கு முன் ஒருமுறை இந்த துதியைப் படித்து விட்டு பாடங்களைப் படித்தால் சரஸ்வதியின் திருவருளால் அவர்களின் நினைவாற்றல் பெருகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.)

Related Stories: