மோட்டா தானா

என்னென்ன தேவை?

உளுத்தம்பருப்பு - 1 கப், பொரிக்க நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு. முதல் பாகு செய்ய: சர்க்கரை, தண்ணீர் - தலா 1/2 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.
இரண்டாம் பாகு செய்ய : சர்க்கரை - 1 கப், தண்ணீர் - 1/2 கப், குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். முதல் பாகிற்கு கொடுத்த பொருட்களை ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். இரண்டாம் பாகிற்கு கொடுத்த பொருட்களை தேன் போன்று இரண்டு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும். ஊறிய உளுத்தம் பருப்பை வடித்து மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நைசாக வடை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.

கடாயில் நெய்  ஊற்றி மிதமான தீயில் வைத்து மாவை விருப்பமான வடிவத்தில் செய்து நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து வடித்து முதல் பாகில் போட்டு 2 நிமிடம் உறியதும் மெதுவாக எடுத்து வடித்து கிண்ணத்தில் போடவும். அதன் மீது இரண்டாம் பாகு ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

× RELATED தெளிவு பெறுஓம்