×

இரவின் கண்கள் விமர்சனம்

ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் பாப் சுரேஷ், ஐரிஸ் என்ற செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவி ஒன்றை வாங்குகிறார். அந்த கருவி, ஒரு மனிதனைப் போல் அவருக்கு உதவி செய்யும் விசித்திரம் நடக்கிறது. தனது சக பெண் ஊழியரான டோலி ஐஸ்வர்யாவுடன் பாப் சுரேஷ் நெருக்கமாக பழகுகிறார். டோலி ஐஸ்வர்யாவின் முன்னாள் கதலருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில், டோலி ஐஸ்வர்யாவின் காதலர் இறந்து விடுகிறார்.

விசயத்தை போலீசிடம் சொல்லிவிட சுரேஷ் முடிவு செய்ய, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி ஐரிஸ், இந்த பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கும், இறந்தவரின் உடலை அப்புறப்படுத்துவதற்கும் யோசனை சொல்கிறது. இதன் விளைவுகளை பல திருப்பங்களோடு, விறுவிறுப்பாக சொல்வது தான் ‘இரவின் கண்கள்’ படத்தின் மீதிக்கதை. விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாப் சுரேஷ், முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.

திருமணம் ஆனவராக இருந்தாலும், தன்னுடன் பணியாற்றும் டோலி ஐஸ்வர்யாவை பார்த்து ஏங்குவதும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் செயல் ‘அடப்பாவி…’ என்று சொல்ல வைக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் டோலி ஐஸ்வர்யா, திரைக்கதையில் திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கிரி துவாரகேஷ், வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கீதா கரணின் கேமரா, இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. சார்லஸ் தனா இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைப்பதோடு, புரியும்படியும் இருக்கிறது. இமானின் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. எழுதி பாப் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.

The post இரவின் கண்கள் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bob Suresh ,Dolly… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்