×

கலந்த சத்துமாவு சீடை

என்னென்ன தேவை?

கலந்த சிறுதானிய மாவு  2 கப்,
உளுத்தம் மாவு  2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு  1/2 கப்,
சீரகம், எள்  தலா 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய்  1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய்  தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து நைசாக அரைக்கவும். அனைத்து மாவையும் இரண்டு முறை சலிக்கவும். எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுத்து ஆறியதும் பரிமாறவும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?