பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து செயல்களிலும் வெற்றி பெற...)

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்

த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்

யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே

தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே

நாராயண ஹ்ருதயம்

பொதுப்பொருள்:

திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருளவேண்டும். திருமாலே, நமஸ்காரம்.

(இத்துதியை புரட்டாசி முதல் சனிக் கிழமையன்று  ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.)

Related Stories: